Skip to main content

பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்? - உ.பி அரசின் விளக்கம்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

UP CM YOGI

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் கரோனா பாதித்த மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. மேலும் அங்கு கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த வழக்கு விசாரணையின் போது, ஆக்சிஜன் இல்லாமல், மக்கள் இறப்பது இன அழிப்புக்கு சற்றும் குறைவானது அல்ல எனக் கூறியிருந்தது நீதிமன்றம்.

 

இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவிலிருந்து பசுக்களைப் பாதுகாக்க 'பசு உதவி மையம்' அமைக்கவும், பசு மாட்டுப் பண்ணைகளில், பசுக்களுக்கு ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்க ஆக்சிமீட்டர் வழங்கவும், பசுக்களுக்கு ஸ்கேன் எடுக்க தெர்மல் ஸ்கேனர்களை வழங்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

 

இதனையடுத்து, இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய உத்தரப்பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தகவல் துறை), பசுக்களுக்கு ஆக்சிமீட்டர் மற்றும் தெர்மல் ஸ்கேனர்களை பயன்படுத்துமாறு உத்தரப்பிரதேச அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், மாட்டுப் பண்ணைகளில், அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்காக ஆக்சிமீட்டரோடு கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து; உ.பி. அரசு அதிரடி அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
UP Govt Action Announcement for Constable exam written by 50 lakhs cancelled

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 60,000 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். 

இந்த நிலையில், காவல்துறை பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு முன்னரே, வினாத்தாள் கசிந்து பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் இந்த தேர்வு ரத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது, ‘ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வு 2023-ஐ ரத்து செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் புனிதத் தன்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் தப்ப முடியாது. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

வெள்ளத்தில் போராடிய பசுமாட்டைக் காப்பாற்றிய அமைச்சர்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
NN

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியில் வைகை ஆற்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேற்பார்வையில் மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதை முன்னிட்டு வைகை ஆறு நீர்வரத்து பாதை, குடகனாறு நீர்வரத்து பாதை பகுதிகளில் ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஊராட்சி நிர்வாகத்தினர் அவர்களுக்கு முறையான தங்குமிடம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார்.

NN

அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கப்பநாயக்கன்பட்டிக்கு சென்று வைகை ஆற்றுப் பாலத்தில் நீர்வரத்து பாதைகளை ஆய்வு செய்தபோது வைகை ஆற்று வெள்ளத்தில் பசுமாடு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் உடனடியாக கிராம மக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து உயிருக்கு போரடிக்கொண்டிருந்த பசு மாட்டை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தார்.