IRCTC எனப்படும் "Indian Railways Catering and Tourism Corporation" சார்பில் "e-catering" என்ற புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி ரயிலில் பயணம் செய்வோர்கள் தங்கள் மொபைலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து "e-catering" ஆப் டவுன்லோடு செய்த பின் தங்கள் பயணிக்கும் ரயில் பெயர் மற்றும் இருக்கை எண் உள்ளிட்டவை குறிப்பிட்ட பின்பு தங்களுக்கு தேவையான உணவுக்களை பயணிக்கும் போதே "e-catering" ஆப் பயன்படுத்தி பயணிகள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். அதன் பிறகு முக்கிய ரயில் நிறுத்ததில் உணவுகளை சமந்தப்பட்டவர்களுக்கு ரயில் துறை சேர்ந்த ஊழியர்கள் வழங்கி அதற்கான கட்டணத்தை வாங்கிக் கொண்டு திரும்புவர். இதில் சிறப்பம்சங்கள் என்னவென்றால் (Domino's Pizza) போன்ற உணவுகள் ரயிலிலேயே முன்பதிவு செய்து கொண்டு உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.


எந்தெந்த ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட உணவுகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது!
1.மும்பை சென்ட்ரல் (BCT).
2. சத்ரபதி சிவாஜி டெர்மினல் ( CST ).
3. நியூ டெல்லி ரயில்வே நிலையம் (NDLS).
4. பழைய டெல்லி ரயில்வே நிலையம் (DEL).
5. பெங்களூர் சிட்டி ஜங்ஷன் (SBC).
6. சென்னை சென்ட்ரல் (MAS).
7. கான்பூர் (CNB).
8. அலகாபாத் ஜங்ஷன் (ALD).
9. வாரணாசி (BSB).
10. லக்னோ (LKO).
11. இட்டரசி "Itarasi" (ET).
12. போபால் ஜங்ஷன் ( BPL ).
13. விஜயவாடா (BZA).
உள்ளிட்ட பல முக்கிய ரயில் நிலையங்களில் இந்த சேவையை IRCTC விரிவுப்படுத்தியுள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகள் எளிதில் உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் ரயில் பயணிகள் சாப்பாடு மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை பெற விரும்பினால் தொலைபேசி எண் : 1323 தொடர்பு கொண்டு தான் பயணிக்கும் ரயில் பெயர் மற்றும் இருக்கை எண்கள் , அடுத்து எந்த ரயில் நிலையம் வரவுள்ளது என்ற முழு விவரத்தை குறிப்பிட்டு "ORDER" செய்யலாம். உணவுக்கான கட்டணத்தை இணைய வழியில் செலுத்தும் வசதியும் உண்டு. இந்த "e-catering" சேவையானது காலை : 6.00 AM முதல் இரவு : 10.00 PM வரை செயல்படும் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
பி.சந்தோஷ் , சேலம் .