Skip to main content

கட்டாய திருமணத்தால் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்... ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி...

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

Girl who fled home to avoid marriage cracks UP PCS exam

 

 

கட்டாய திருமணத்தைத் தவிர்க்க வீட்டைவிட்டு வெளியேறிய பெண், ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று வீடு திரும்பிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த சஞ்சு ராணி வர்மா என்பவர், தனக்கு நடக்கவிருந்த கட்டாய திருமணத்தை தவிர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த 2013 ல் சஞ்சுராணியின் தாயார் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் சஞ்சுராணிக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க முயன்றுள்ளனர். ஆனால், திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத சஞ்சுராணி, வீட்டிலிருந்து வெளியேறி டெல்லியில் குடியேறியுள்ளார். படிப்பதற்கு பணமும், குடும்பத்தினரின் ஆதரவும் இல்லாத சஞ்சுராணி பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து, அதன்மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து தனது பட்டப்படிப்பை முடித்ததோடு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாராகி வந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்ற அவர் தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றிபெற்று உத்தரப்பிரதேச வணிகவரித்துறை அதிகாரியாக தனது வெற்றிக்கு அவர் திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "நான் 2013 ல் என் வீட்டை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், எனது படிப்பையும் கூட விட்டுவிட்டேன். என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. பின்னர் நான் குழந்தைகளுக்கு டியூஷன் கற்பிக்க ஆரம்பித்தேன். தனியார் பள்ளிகளில் பகுதிநேர கற்பித்தல் வேலையும் கிடைத்தது. இவற்றின் மூலம் எனது சிவில் சர்வீஸ் தயாரிப்பை தொடர முடிந்தது

 

என் அம்மா காலமான பிறகு, திருமணம் செய்து கொள்ளும்படி என் குடும்பம் என் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. எனது கனவைப் பற்றி அவர்களுக்கு விளக்க முயன்றேன், ஆனால் அனைத்தும் வீணானது. எனவே, நான் சொந்தமாக வாழ முடிவு செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்