Skip to main content

மாட்டு தீவன ஊழல்; மேலும் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

LALU PRASAD YADAV

 

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஏற்கனவே முதல் நான்கு வழக்குகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதுடன், நான்கு வழக்குகளிலும் சேர்த்து மொத்தமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

இருப்பினும் இந்த நான்கு வழக்குகளின் தீர்ப்புகளுக்கும் எதிராகவும் மேல்முறையீடு செய்துள்ள லாலு பிரசாத் யாதவ், குற்றவாளி என தீர்ப்பளிக்கபட்ட அனைத்து வழக்குகளிலும் இருந்து ஜாமீன் பெற்று சிறைக்கு வெளியே இருந்து வருகிறார். இந்தநிலையில் இன்று மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான ஐந்தாவது மற்றும் இறுதி வழக்கான டொராண்டா கருவூலத்தில் இருந்து 139.35 கோடி சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

லாலு பிரசாத் யாதவோடு சேர்த்து மொத்தம் 75 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 35 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் லாலு பிரசாத் உள்ளிட 40 பேருக்கு வரும் 21 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

இந்த வழக்கில் 170 குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 55 பேர் இறந்துவிட்டனர். எழு பேர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டனர். இருவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், 6 பேர் தலைமறைவாக உள்ளனர். 24 பேர் இன்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்