
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவிற்கு, இந்திய திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழ்திரையுலகை சேர்ந்த நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் இயக்குனர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும், ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்தநிலையில் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா மீது இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை என கூறியுள்ளது. மேலும் ஒளிபரப்பு திருத்த சட்டம் மீதான பரிந்துரைகள் இன்னும் ஆலோசனை கட்டத்தில் மட்டுமே உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.