Skip to main content

கேபிள் பாலம் இடிந்து 32 பேர் உயிரிழப்பு...

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

cable bridge collapse

 

கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றை கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பல நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இந்த பாலமானது கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Trapped workers; Rescue operation continues for 3rd day

 

சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் கட்டுமான பணிக்காக 56 அடி பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பள்ளத்தில் அங்கு பணியாற்றி வந்த 4 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து இந்த விபத்தில் சிக்கிய 4 தொழிலாளர்களில் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பள்ளத்தில் சிக்கியுள்ள இருவரையும் மீட்கும் பணி 3 நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், பள்ளத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். 

 

 

Next Story

‘மிக்ஜாம்’ புயல் நிவாரணப் பணி; முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

'Miqjam' storm relief mission; Chief Minister M. K. Stalin's action order

 

‘மிக்ஜாம்’ புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாகச் சென்னை நகரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து கடந்த 4 ஆம் தேதி (04.12.2023) தமிழக அரசு சார்பில் ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன், கூடுதல் அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி அமைச்சர் எஸ். ரகுபதி கே.கே. நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும், அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ராயபுரம் பகுதிக்கும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுடன் கூடுதலாக அரும்பாக்கம் பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அதே சமயம் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப் பணிகளுக்குத் தேவையான உத்தரவுகளை வழங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து மீட்புப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவையும் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் ஆகியோரை திருவொற்றியூர் பகுதிக்கு நியமித்து நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.