Published on 05/12/2020 | Edited on 05/12/2020

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் 5- ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், மத்திய அமைச்சர்களுடனான பிரதமரின் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.