மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கிராமத்து கலைஞர்கள் கைவினைப் பொருட்களின் விற்பனை கண்காட்சி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
![Exhibition of all India-wide handicrafts in puducherry](http://image.nakkheeran.in/cdn/farfuture/JMKQY_AJ-Wq5voKC50nlBkqocHkPoBRMW_du8VQZc4Q/1568900714/sites/default/files/inline-images/puducherry8.jpg)
இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா உட்பட 20- க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து கிராமப்புற குழுக்களை சேர்ந்த 150- க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் கலந்துகொண்டு, 180- க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து, தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பட்டு, புதுச்சேரி கைவினைப்பொருட்கள், ஹரியானா சீருடைகள், ஆந்திரப் பிரதேசத்தின் படுக்கை விரிப்புகள், கேரள பாரம்பரிய உடை போன்றவை விற்பனைக்கும், காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி வரும் 29-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.