![skeleton of woman in septic tank; A shock after 15 years](http://image.nakkheeran.in/cdn/farfuture/n537wuiluU9U5Z82oOrFAAybY2LRFl5rUiLLP9mStx8/1720075206/sites/default/files/inline-images/a72530.jpg)
மனைவி காணாமல் போனதாக வெளியான சம்பவத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின்பு செப்டிக் டேங்கில் இருந்து மனைவியின் உடல் எலும்பு கூடாக கைப்பற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த அனில் குமார் என்பவர் கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு கலா திடீரென காணாமல் போனதாக கணவர் அனில் குமார் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது அணில் குமார் இஸ்ரேலில் வேலை பார்த்து வருகிறார். கேரளாவில் அவருடைய பழைய வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு காணாமல் போன கலா உண்மையிலேயே காணாமல் போகவில்லை கணவன் அனில் குமாரால் கொலை செய்யப்பட்டு வீட்டின் செப்டிக் டேங்கில் போடப்பட்டுள்ளார் எனப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் சீரமைப்பு செய்துவரும் அனில் குமாரின் வீட்டின் செப்டிக் டேங்கில் சோதனையிட்டதில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அனில் குமாரை இஸ்ரேலில் இருந்து கேரளா கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருவதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு செப்டிக் டேங்கில் வீசப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் துப்பறிந்து கண்டறிந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.