Published on 26/02/2023 | Edited on 26/02/2023

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான காரசார விவாதங்கள் ஏற்பட்டு அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணியனை இரண்டாக பிரிந்தது. ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என எடப்பாடி அணியும் கூட்டுத் தலைமைதான் வேண்டும் என ஓபிஎஸ் அணியும் தொடர்ந்து போராடி வந்தன. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்றும், ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதனை எடப்பாடி தரப்பினர் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இடைத்தேர்தல் பரபரப்புக்கிடையே இந்த தீர்ப்பு வந்திருந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே கலந்து கொண்டார்.
இந்தநிலையில் புதுச்சேரியில் கடல் பகுதியில் 'எங்களுக்கு எல்லாமே எடப்பாடி தான்' என பேனரை வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் அதிமுகவினர்.