Skip to main content

கேரளாவில் மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்த தினசரி கரோனா பாதிப்பு!

 

kerala

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட மிக அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனையடுத்து கேரள அரசு கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது.

 

இந்தநிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து, 8,850 ஆக பதிவானது. ஆனால் நேற்று அம்மாநிலத்தில் சற்று அதிகரித்த தினசரி கரோனா பாதிப்பு  9,735 ஆக பதிவானது. இந்தநிலையில் இன்று மீண்டும் கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

இன்று கேரளாவில் 12,616 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா தொற்றிலிருந்து 14,516 மீண்டுள்ளனர்.