Published on 02/09/2019 | Edited on 02/09/2019
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விதவிதமான பொருட்களில், விதவிதமான அளவுகளில் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் நாடு முழுவதும் பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 9000 தேங்காய்களை கொண்டு செய்யப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை பலரையும் கவர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு பகுதியில் 9000 தேங்காய்களை கொண்டு 30 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 20 நாட்களாக 70 பக்தர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். கடந்த ஆண்டு இதே கோயிலில் கரும்புகளால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பிரம்மாண்ட விநாயகரின் சிலை தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.