மராத்தியதில் நடந்த பொதுக்கூட்டத்தில் புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் பெயரை வைத்து வாக்கு சேகரித்ததற்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நடத்தியது. அதில் பல வீரர்கள் நம் நாட்டிற்காக வீரமரணமடைந்துள்ளனர். முதல்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு, பாலாகோட்டில் தாக்குதல் நடத்திய நம் வீரர்களுக்கு உங்களின் முதல் வாக்கை அர்ப்பணியுங்கள் என பேசியிருந்தார். இந்திய ராணுவ நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடந்த மாதம் தடை விதித்திருந்தது. எனவே பிரதமரின் இந்த பேச்சுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.