Skip to main content

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராக பொறுப்பேற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்...

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

Harsh Vardhan takes charge as the chairman of WHO Executive Board

 

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று பொறுப்பேற்றார். 
 


34 உறுப்பினர்களைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவராக ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஹிரோகி நகதானி பதவிவகித்து வந்தார். அவரது பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில் அப்பதவிக்கு இந்தியச் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியக் குழு, இந்தியாவைச் சேர்ந்தவரே இந்த அமைப்பிற்கு அடுத்த தலைவராக வரவேண்டும் எனக் கடந்த ஆண்டு ஒருமனதாக முடிவெடுத்த நிலையில், ஹர்ஷ்வர்தனை நிர்வாகக் குழுத் தலைவராக நியமிக்கும் ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கொண்ட உலக சுகாதாரச் சபை கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராக பொறுப்பேற்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்