Published on 18/01/2022 | Edited on 18/01/2022

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், குரு ரவிதாஸின் பிறந்தநாளையொட்டி தேர்தலை தள்ளி வைக்கவேண்டுமென என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனையேற்று இந்திய தேர்தல் ஆணையம், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை பிப்ரவரி 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
இந்தநிலையில் தற்போது பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரான பூபிந்தர் சிங் ஹனிக்குச் சொந்தமான இடங்கள் உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத மணல் எடுப்பு தொடர்பான பண மோசடி வழக்கில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.