இந்தியாவில் ஹார்டுவேர், நெட்வொர்க்கிங், மென்பொருள் மற்றும் நுகர்வோர் துறையில் பணிபுரிபவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும், நகரங்களில் பெங்களூருவில் வேலைப்பார்பவர்கள்தான் அதிக சம்பளம் பெறுவதாக ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக ஹார்டுவேர், நெட்வோர்க்கிங் துறையில் ரூ14.7 லட்சம் சம்பளம் கிடைக்கின்றது. அதுபோல மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையில் பணிபுரிபவர்கள் ரூ.12 லட்சமும், நுகர்வோர் துறையில் பணிபுரிபவர்கள் ரூ.9.9 லட்சம், சுகாதார துறையில் ரூ.9.5 லட்சம், நிதித்துறையில் ரூ.9.4 லட்சம், கார்ப்பரேட் நிறுவனங்களில் ரூ.9.37 லட்சம், கட்டுமான துறையில் பணிபுரிபவர்கள் ரூ.8.3 லட்சம் உற்பத்தி துறையில் பணிபுரிபவர்கள் ரூ.8.1லட்சம், ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் ரூ.7.8 லட்சம், மீடியா மற்றும் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களில் உள்ளவர்கள் ரூ.7.15 லட்சம் சம்பளம் பெறுவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இன்னுமொரு தகவலாக, நகரங்கள் அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக பெங்களூருவில் வசிப்பவர்கள் ரூ. 11.50 லட்சம், மும்பையில் வசிப்பவர்கள் ரூ. 9 லட்சம், டில்லி - என்சிஆர் வாசிகள் ரூ. 9 லட்சம், ஐதராபாத் வாசிகள் ரூ.8.5 லட்சம், சென்னைவாசிகள் ரூ.6.30 லட்சம் சம்பளம் பெறுகின்றனராம். மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் வேலைப் பார்பவர்கள்தான் குறைவான சம்பளத்தை பெறுகின்றனர் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ’லிங்க்ட் இன்’ நிறுவனம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.