Skip to main content

அடிப்படை உதவிகள் நிறைவேற்றம்; வீடு தேடி வரும் தன்னார்வலர்கள்

Published on 11/01/2025 | Edited on 11/01/2025
 EARAM EDUCATION AND RURAL DEVELOPMENT SOCIETY

பாண்டிச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஈரம் பவுண்டேசன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு தொண்டு ஆற்றும் பணியை தொடர்ந்து ஆற்றி வருகிறது. இதனை அரசியல் செயற்பாட்டாளர்  ‘ஈரம்’ ராஜேந்திரன்  நிறுவி மக்கள் சேவை பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஈரம் பவுண்டேசன் இயற்கை விவசாயம், பெண்கள் நலன் போன்று பலவிதங்களில் பாண்டிச்சேரி மக்களுக்கு சேவை செய்து கொண்டு வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக ஈரம் பவுண்டேசன் தன்னார்வலர்களைக் கொண்டு மக்களின் தேவைகளை அவர்களின் கோரிக்கைகளை நேரடியாகத் தேடிச் சென்று கேட்டு அறிய உள்ளது.

60 தன்னார்வலர்களைக் கொண்டு ஜனவரி 11, 12 ஆகிய இருநாட்களில் முத்தியால்பேட்டை முழுவதும் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதை நிறைவேற்றும் முன்னெடுப்புகளை எடுக்க உள்ளதாக களம் இறங்கியுள்ளனர். நேரே சென்று கோரிக்கை மனுக்களை பெரும் இந்த திட்டத்தை புதுச்சேரி மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். முத்தியால்பேட்டை பகுதி மட்டுமல்லாமல் புதுச்சேரி முழுவதும் எதிர்பார்க்கின்றார்கள்.

ஈரம் பவுண்டேசன் தரும் படிவத்தில் ஒரு சீரியல் நம்பர் உடன் கூடிய விண்ணப்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த சீரியல் நம்பரைக் கொண்டு அவர்களின் கோரிக்கையை ஈரம் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு நேரில் வந்து அதன் நிலையை அறிந்து கொள்ளலாம். மக்களின் கோரிக்கைகளை அவர்களின் தேவைகளை விரைவில் ஈடேறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஈரம் பவுண்டேசனும் அதன் நிறுவனர் ஈரம் ராஜேந்திரனும் செய்வதாக உறுதி அளிக்கின்றார்.
 

சார்ந்த செய்திகள்