ஜனநாயகத்தில் காங்கிரசுக்கு ஈடுபாடு இருந்ததென்றால் ஏன் அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை என சுப்ரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி மேடைகளில் பேசும்பொழுது 70 வருடமாக காங்கிரஸ் கட்சி இந்த நாட்டிற்கு என்ன செய்தது என்று விமர்சித்து பேசிவருக்கின்ற நிலையில் அண்மையில் அதற்கு பதிலடி தரும் விதமாக மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே ''ஒரு தேநீர் விற்பவர் (மோடி) நாட்டின் பிரதமர் ஆகலாம் என்ற ஒரு ஜனநாயகத்தை இதனை நாள் கட்டிகாத்ததே காங்கிரஸ்தான் என கூறியிருந்தார்.
இதனை அடுத்து இன்று தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியசாமி கூறுகையில்,
பிரதமர் மோடியை அடையாளம் காட்ட தேநீர் விற்றவர் என்பது சரியான முறையல்ல. அவர் பயிற்சி மற்றும் முறையான கல்வி பெற்றவர். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்திருக்கிறார். குஜராத்தில் பாஜகவின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்தவர் அதுதான் அவரது சாதனை. அதை வைத்துதான் அவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.
காங்கிரஸ் உண்மையில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் முழு ஈடுபாட்டில் உள்ள கட்சியென்றால் ஏன் பி.ஆர் அம்பேத்காருக்கு பாரத ரத்னா வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.