ஜம்மு காஷ்மீரிலுள்ள லே பகுதியில் கிரிக்கெட் வீரர் தோனி இராணுவ பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் அவர் அங்கிருக்கும் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் ஓய்வு அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் முதல் பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோனி எனக்கு இரண்டு மாதம் ஓய்வு தேவை நான் இந்திய இராணுவத்தின் பணிபுரிய விரும்புகிறேன் என்றார். இதன் பின் அவர் தற்போது இந்திய எல்லை பகுதியான லே வில் ரோந்து பகுதியில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது ஜம்மு - காஷ்மீரில் 2 வார கால ராணுவ பயிற்சியை முடித்துள்ளார் தோனி. இந்நிலையில் லேவிலுள்ள கூடைப்பந்து மைதானம் ஒன்றில் சிறுவர்களுடன் தோனி இராணுவ சீறுடையில் கிரிக்கெட் விளையாடி வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.