Skip to main content

"பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காக தண்டிக்கமுடியாது" - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

priya ramani - mj akbar

 

இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றியவர் எம்.ஜே அக்பர். இவர் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். இவர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி, தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் புகார் தெரிவித்தார்.

 

இதனையடுத்து எம்.ஜே அக்பர், பிரியா ரமணி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கிலிருந்து பிரியா ரமணியை விடுவித்துள்ளது. மேலும், நீதிமன்றம் தனது தீர்ப்பில், "சமூக அந்தஸ்துள்ள ஒரு மனிதர் கூடப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் ஏற்படுத்துபவராக இருக்கலாம். பாலியல் துஷ்பிரயோகம் கண்ணியத்தையும் தன்னம்பிக்கையையும் பறிக்கிறது. கண்ணியத்தை விலைகொடுத்து நற்பெயருக்கான உரிமையைப் பாதுகாக்க முடியாது. ஒரு பெண் பல தசாப்தங்களுக்குப் பிறகும் தனது குறைகளை முன்வைக்க உரிமையுண்டு" எனக் கூறியுள்ளது.

 

மேலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில், சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர் பல ஆண்டுகளாக மன அதிர்ச்சி காரணமாகப் பேசாமால் இருக்கலாம் என்பதை நம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காகப் பெண்ணை தண்டிக்க முடியாது" எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
2 persons arrested in the case of attack on the journalist suffered a broken leg

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

தமிழக பாஜக மாநிலத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பத்திரிகையாளர்களைக் கீழ்த்தரமாகப் பேசிவரும் தமிழக பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (25-01-2024) மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மு.அசீப் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நக்கீரன் ஆசிரியர், தி இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், சன் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர்  மு. குணசேகரன் எனப் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.