உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது.
இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,83,156ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,52,743 ஆக உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,704 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 654 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.