டெல்லி மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அத்றகான பணிகளில் அரசியல் கட்சிகள் படுத்தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பயணித்த ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகித் தேர்தலை சந்திக்கவுள்ளது. அதனால், டெல்லி தேர்தல் களம் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக என மூம்முனை போட்டியாக மாறியுள்ளது.
இந்த நிலையில் பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதல்வர் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி தொகுதியான கல்காஜி சட்டமன்றத் தொகுதியில், முன்னாள் எம்.பி ரமேஷ் பிதுரியை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்திருந்தது. இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓக்லா மற்றும் சங்கம் விஹார் சாலைகளை நாங்கள் அமைத்தது போல், கல்காஜியின் அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னத்தைப் போல மென்மையாக்குவோம்” என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, டெல்லி முதல்வர் அதிஷி தனது துணை பெயரை மாற்றியதையும் அவரது தந்தை தொடர்புப்படுத்தி ரமேஷ் பிதுரி சர்ச்சைக்குரிய வகையில் தாக்கி பேசியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அதிஷி, ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அரசியல் இந்தளவுக்குத் தரம் தாழ்ந்துபோகும் என நினைக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.