Skip to main content

கோயிலுக்கு வெளியே நடனம்.. இளம் பெண் மீது பாய்ந்த வழக்கு!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

hkj

 

கோயிலுக்கு வெளியே நடனமாடிய பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோவிலுக்கு ஆர்த்தி சாஹூ என்ற இளம் பெண் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளுடன் சாமி தரிசனம் செய்த அவருக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. கோவிலுக்கு முன்பு ரீல்ஸ் வீடியோ எடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த அவர் உடன் வந்த நண்பர்களின் உதவியுடன் கோயிலுக்கு வெளியே வாசற்படியில் நின்று வீடியோ எடுத்துள்ளார்.

 

வீடியோ எடுத்த அவர் அன்று மாலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார். வீடியோ உடனடியாக அவரின் மற்ற நண்பர்களால் பகிரப்பட்டதால் சில மணி நேரங்களில் அந்த வீடியோ வைரலானது. சிலர் டான்ஸ் சூப்பர் என்று கமெண்ட் செய்த நிலையில், சிலர் கோவிலுக்கு முன்பு ஆபாச நடனமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்படவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்தான கல்லூரி கலை நிகழ்ச்சி; மொட்டை மாடியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 college art show canclelled students protest by sitting on the terrace

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூ காலேஜ்' கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டுதோறும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள  நியூ காலேஜ் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி வழக்கம்போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நியூ காலேஜ் மாணவர்கள் மொட்டை மாடி பகுதியில் அமர்ந்து  கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மாணவர் ஒருவர் ஆபத்து உணராமல் மொட்டை மாடியில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து போராட்டம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.