கரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு.
அதன்படி, கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கல்வி நிறுவனங்கள் செயல்படும். உணவகங்கள், பார்கள், மதுபானக் கூடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மால்கள், வணிக நிறுவனங்கள், கலையரங்கம், அரங்குகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பக்தர்களின்றி குடமுழுக்கு விழாவை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் ஜனவரி 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன், "இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே, புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படுவர். முழு ஊரடங்கு சூழல் உருவாக்கப்படுவதைத் தவிர்ப்பது என்பதுதான் புதுச்சேரி அரசின் எண்ணமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.