Published on 24/09/2020 | Edited on 24/09/2020
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவின் பசவகல்யாண் தொகுதி எம்.எல்.ஏ-வான நாராயண் ராவ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.