Published on 15/04/2019 | Edited on 15/04/2019
சண்டிகரில் உள்ள ஒரு பாட்டா கடையில் துணிப்பை ஒன்றுக்கு 3 ரூபாய் வாடிக்கையாளரிடம் வாங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர் இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி சென்றுள்ளார். அங்கு பாட்டா நிறுவனத்திற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கு விசாரிக்கப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
![consumer court fined bata 9000 rupees for a complaint](http://image.nakkheeran.in/cdn/farfuture/2haufGGbPCfmOH3glogIu3cMp5W-PbyMlRuRnPZHY6M/1555328413/sites/default/files/inline-images/bata-std.jpg)
அந்த தீர்ப்பின்படி வாடிக்கையாளருக்கு வழக்கு செலவுத்தொகையாக 1000 ரூபாய், வாடிக்கையாளருக்கு இழப்பீட்டுத் தொகையாக 3000 ரூபாய் மற்றும் அபராதமாக 5000 ரூபாய் என மொத்தம் 9000 ரூபாயை பாட்டா நிறுவனம் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது. வெறும் 3 ரூபாய் பை-க்காக பாட்டா நிறுவனம் 9000 ரூபாய் இழந்த சம்பவம் அனைவராலும் சுவாரசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.