![Congress mla who ate the food fed to the monk on the list!](http://image.nakkheeran.in/cdn/farfuture/6SexnQ_wAm5JSKXpVSAbkJ3Fv0EzpEITS6G83rxrKQQ/1653296210/sites/default/files/inline-images/de4434343.jpg)
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பட்டியலின் துறவி ஒருவருக்கு உணவை ஊட்டிவிட்டு, அதே உணவைத் திரும்பப் பெற்று சாப்பிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்பேட்டை தொகுதியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான சமீர் அகமது கான், நேற்று (22/05/2022) பெங்களூருவில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அப்போது, சாதிய பாகுபாடுகளைக் களைவதன் அவசியத்தை அவர் வலியுறுத்திப் பேசினார். விழாவில், அருகே அமர்ந்திருந்த பட்டியலின துறவி ஒருவருக்கு சட்டமன்ற உறுப்பினர் சமீர் அகமது கான் உணவு ஊட்டினார்.
![Congress mla who ate the food fed to the monk on the list!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ta4SC-Ko41aaZSxIq3FwtJxOrUW8-EnkH1ub0UC_EjQ/1653296239/sites/default/files/inline-images/mla3232.jpg)
பதிலுக்கு அந்த துறவி சட்டமன்ற உறுப்பினருக்கு உணவு ஊட்ட முற்பட்டார். அதைத் தடுத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், தாம் ஊட்டிய உணவை, துறவியின் வாயில் இருந்து திரும்பப் பெற்று சாப்பிட்டார். இப்படி தான் சாதிய பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என சமீர் அகமது கான் விளக்கமளித்தார்.