Skip to main content

விமானநிலையத்தில் 'பாம்' என உச்சரித்த முதியவர் கைது!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

cochin international airport old man incident police

 

'பாம்' என்ற வார்த்தையைச் சொன்ன முதியவர் கைது செய்யப்பட்டார். 

 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 63 வயதான மம்மன் ஜோசப் என்ற முதியவர் தனது மனைவியுடன் ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் மகளைப் பார்க்க செல்வதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் கொண்டு வந்த உடைமைகளை விமான நிலையத்தின் அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த அந்த முதியவர், தனது உடைமைகளில் 'பாம்' இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

 

உடனடியாக, அந்த முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவரின் உடைமைகளை முழுவதுமாகப் பரிசோதித்து வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து, அந்த முதியவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

The Air India flight was delayed by 15 hours!

 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று (13/09/2022) நண்பகலில் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் 15 மணி நேர காத்திருப்புக்கு பிறகு இன்று (14/09/2022) அதிகாலை புறப்பட்டு சென்றது. 

 

ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பின் மதியம் 12.50 மணிக்கு குவைத் புறப்படும். அந்த விமானத்திற்காக பயணிகள் நேற்று காத்திருந்தனர். ஆனால் பல மணி நேரமாகியும் விமானம் வந்து சேராததுடன், அது குறித்த தகவல்களும் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

இதையடுத்து பயணிகள் தங்குவதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்தது. இதற்கிடையில், தொழிற்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த விமானம் 15 மணி நேரம் கழித்து இன்று அதிகாலை 01.00 மணியளவில் திருச்சி வந்து சேர்ந்தது. இதைத் தொடர்ந்து, 02.00 மணியளவில் விமானம் புறப்பட்டு சென்றது.  

 

 

Next Story

விமானத்தில் அசந்த தொழிலாளி... விழித்துப் பார்த்தால் அபுதாபி... இப்படியும் ஒரு வினோதம்!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

MUMBAI INTERNATION AIRPORT INDIGO AIRLINES EMPLOYEE

 

விமானத்தில் சரக்குகளை ஏற்றும் தொழிலாளி ஒருவர், கார்கோ அறையிலே அசந்துவிட்டதால் அபுதாபியில் வரை சென்று திரும்பியது பலரையும் வியக்க வைத்துள்ளது. 

 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அபுதாபி சென்ற இண்டிகோ ஏர்பஸ் விமானத்தில் தான் இந்த வினோதம் நிகழ்ந்துள்ளது. அதிகாலை 02.00 மணியளவில் பயணிகளின் உடைமைகள் உள்ளிட்ட சரக்குகளை கார்கோ வரையில் ஏற்றிய அந்த தொழிலாளி, அசதியில் அங்கேயே உறங்கிவிட்டார். 

 

விமானம் வானில் பறந்த பிறகே நிலைமை அவருக்கு தெரிய வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், விமானத்திலேயே தவித்துள்ளார். சில மணி நேரத்திற்கு பிறகு விமானம் அபுதாபியில் தரையிறங்கியதும், உடைமைகள் வைக்கப்பட்டுள்ள அறைத் திறக்கப்பட்டுள்ளது. உள்ளே ஒருவர் இருப்பதைப் பார்த்து அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

வேறு வழியில்லாமல் தனது நிலைமையை அதிகாரிகளிடம் தொழிலாளி எடுத்துக் கூறியதை அடுத்து, உரிய அனுமதிப் பெற்று அந்த தொழிலாளி மீண்டும் அதே விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். 

 

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.