Published on 20/02/2019 | Edited on 20/02/2019
மேற்கு வங்க மாநில புருலியா மாவட்டத்தில் சக்திபாத் சர்கார், திருலோச்சன் மஹாதோ, துலால் குமார் ஆகிய 3 பாஜகவினர் கொல்லப்பட்டது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஏ.கே.சிக்ரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது, 'இந்த கொலைகள் அரசியல் இல்லை என்றால் பின் மேற்கு வங்கத்தில் என்னதான் நடக்கிறது?' என கேள்வி எழுப்பினார். இதற்கு மேற்கு வங்க அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல், “சிபிஐ அமைப்பில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது. மனுதாரர் கூறுவது அனைத்தும் அரசியல்தானே” என யாரும் எதிர்பார்க்காத ஒரு மறுகேள்வியை எழுப்பினார். இந்த வாதத்தால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் சிரிப்பலை நிலவியது. அதன் பின் விசாரணை முடிந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.