Skip to main content

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
j

 

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கடந்த 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பெயரில், இந்திய கல்விக்கொள்கையை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. அதன்படி புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன, சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவுக்கும், இந்தியாவுக்குமான உறவு சரியில்லாத நிலையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்