கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடந்துவரும் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எதிரான குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதுமுள்ள அனைத்து குழந்தைகள் காப்பகம், மிஷினரிஸ், சேரிட்டி என குழந்தைகள் நலம் சார்ந்து செயல்படும் அனைத்து அமைப்புகளிலும் சோதனை நடத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. குழந்தை கடத்தல், சட்டவிரோத தத்தெடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என அதிகரித்து வருகின்ற சூழலில் நாடும் முழுவதும் உள்ள குழந்தை காப்பகங்கள், சாரிட்டி, மிஷினரி என எல்லா குழந்தைகள் நலம் சார்ந்த அமைப்புகளிலும் சோதனைகள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
அண்மையில் ஜார்கண்ட் ராஞ்சியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் 6 மாத குழந்தை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.