Skip to main content

ஆயுதங்கள் வாங்க ரூ.500 கோடி சிறப்பு நிதி அதிகாரம்...

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

Centre grants forces emergency funds

 

சீனாவுடனான எல்லைப்பிரச்சனையைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கும் வகையில் ரூ.500 கோடி சிறப்பு நிதி அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

 

இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் மறுபுறம் சீன ராணுவம் தனது படைகளைத் தயார்படுத்தி வருகிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தயாராகி வருகிறது. இதனால் இருநாட்டு எல்லைப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கும் வகையில் ரூ.500 கோடி சிறப்பு நிதி அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. சீனாவுடனான எல்லைப்பிரச்சனையில் எந்தவொரு சூழலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்புப் படையினருக்கு இந்த 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியள்ளது மத்திய அரசு. இதன்மூலம் முப்படைகளும் தங்களுக்குத் தேவையான வெடிமருந்துகள், ஆயுதங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு இந்த நிதி அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்