Published on 20/05/2022 | Edited on 20/05/2022
![Lalu Prasad Yadav](http://image.nakkheeran.in/cdn/farfuture/Kcfmzw-4GMVwqecCq3P_HYtsRwFpIR2P57pfuE2ulbY/1653021970/sites/default/files/inline-images/46_27.jpg)
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனரான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகளுக்குத் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது நடைபெற்ற ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. அதனடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றுவருகிறது.