Skip to main content

பாஜக சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்!! நாளை வாக்கெடுப்பு!!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018

நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை அடுத்து மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி, ராகுல்காந்தி உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்குபெற்றனர்.

 

modi

 

 

 

நேற்று நடந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர்  மகாஜன் அறிவித்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே நாங்கள்தான் பெரிய கட்சி எனவே நாங்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க வேண்டும் என முறையிட்டார்.  பெரிய கட்சியோ சிறிய கட்சியோ கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாளை முழுவதும் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் எனவே நாளை மற்ற அலுவல் பணிகள்  நடைபெறாது என சபாநாயகர் தெரிவித்தார்.

 

அதெபோல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் மற்ற கட்சிகளால் கொண்டுவரப்பட்டிருக்கும்  நம்பிகையில்லா தீர்மானத்தை சந்திக்க அரசு தயார் என தெரிவித்தார்.

 

 

 

திரிமுனால் சார்பில் நாளை நடக்கவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதத்தை வெள்ளிக்கிழமை மாற்றியமைக்கும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே  அந்த கோரிக்கையை ஆதரித்தார். ஆனால் மத்திய அரசு அதை ஏற்கமறுத்தது. சபாநாயகர் எந்த தேதியில் எந்த நேரத்தில் விவாதம் தொடங்கும் என குறிப்பிட்ட பிறகு அதை மாற்றியமைக்க முடியாது என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார்  தெரிவித்தார். அதனால் த்ரிமுனால் சார்பில் வெளிநடப்பு செய்யப்பட்டது.

 

மொத்தம் 535  உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பாஜவின் சொந்த எம்பிக்கள் எண்ணிக்கை சபாநாயகர் உட்பட 274. கூட்டணி கட்சிகளின் ஆதரவு என மொத்தம்  313 உறுப்பினர்களின் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது. இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்றே நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டு நாளை விவாதமும் ஓட்டெடுப்பும் நடக்கவிருப்பது அங்கு சற்று சலசலப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இது பாஜக சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது குறிப்பிடத்தக்கது

சார்ந்த செய்திகள்