Skip to main content

பாஜக - நிதீஷ் கூட்டுச்சதியே லாலுவுக்கு எதிரான தீர்ப்புகள்! - தேஜஸ்வி யாதவ்

Published on 25/01/2018 | Edited on 25/01/2018
பாஜக - நிதீஷ் கூட்டுச்சதியே லாலுவுக்கு எதிரான தீர்ப்புகள்! - தேஜஸ்வி யாதவ்

லாலுவுக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்புகளில் பாஜக - நிதீஷ்குமாரின் கூட்டுச்சதி இருப்பதாக லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். 

பீகார் மாநிலத்தில் 1991 - 1994 காலகட்டத்தில் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவனம் வாங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதுதொடர்பாக அவர்மீது ஐந்து வழக்குகள் தொடரப்பட்டன. முன்னதாக கடந்த ஜனவ்ரி 6ஆம் தேதி ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு மீதான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், 3.5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, லாலு பீர்சா முண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.



இந்நிலையில், மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சாய்பாசா மாவட்டத்தில் அரசு கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடியை செலவு செய்த குற்றத்திற்கான வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ்விற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஷ்ராவும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இதுகுறித்து பேசியுள்ள தேஜஸ்வி யாதவ், ‘பாஜக - ஆர்.எஸ்.எஸ். - நிதீஷ்குமார் ஆகியோரின் கூட்டுச்சதியால்தான் லாலுவுக்கு எதிராக இத்தனை தீர்ப்புகள் வருகின்றன. கீழமை நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புகளுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என பேசியுள்ளார்.

சார்ந்த செய்திகள்