Skip to main content

ஆம்புலன்ஸ்களான பேருந்துகள்; சென்னையிலும் தயார் நிலையில் மருத்துவமனைகள்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Ambulance buses; Hospitals are ready in Chennai too

 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

தற்போதைய நிலவரப்படி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 044-25330952, 044-25330953, 25354771 என்கிற அவசர கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் 350க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்த விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கும் நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

ஒடிசாவில் பேருந்துகள் ஆம்புலன்ஸ்களாக தற்காலிகமாக மாற்றப்பட்டு மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றனர். அதேநேரம் தமிழகத்தில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்