2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்ததை அடிப்படையாக கொண்டு, இந்நாட்டிற்கு நான் காவலாளியாக இருப்பேன் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். யாரையும் ஊழல் செய்யவும் விடமாட்டேன். நானும் ஊழல் செய்ய மாட்டேன். இந்த தேசத்தின் காவலாளியாக நான் இருப்பேன் என கூறினார்.
பிரதமர் மோடி காவலாளியாக இருப்பேன் என்று கூறியதை மையப்படுத்தி அவ்வப்போது காங்கிரஸ் அவரை விமர்சனம் செய்து வந்தது. ரபேல் விவகாரத்தில் ஒரு திருடன் தான் இந்த தேசத்தின் காவலாளியே என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்கின் பெயரை காவல்காரன் நரேந்திர மோடி என மாற்றியுள்ளார். மோடியின் இந்த செயலுக்கு பின் பாஜக வின் மூத்த தலைவர்களும் இதனை பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரும் தங்கள் பெயருக்கு முன் காவலாளி எனும் வார்த்தையை தங்கள் ட்விட்டர் பெயருக்கு முன் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.