பெங்களூருவில் ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் பாபுசபாளையத்தில் 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதில் பல்வேறு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. சுமார் 14 மணி நேரமாக அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எட்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
உயிரிழந்த ஐந்து பேரில் மூன்று பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பேர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்புப் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 6 மாடிக் கட்டிடம் சரிந்து விழும் அந்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.