Published on 15/08/2022 | Edited on 15/08/2022

கரோனாவுக்கு எதிராக மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டம் மற்றும் பூஸ்டர் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
BBV154 என்ற அந்த தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் பரிசோதித்து வந்தது. அதில், கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் BBV154 செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மூக்கு வழியே செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.