Published on 29/08/2019 | Edited on 29/08/2019
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த முடிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சத்ய பால் மாலிக், "ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு அரசுத் துறைகளில் 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இது விரைவில் நிரப்பப்படும். இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் ஜம்மு-காஷ்மீர் அல்லது லடாக்கில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்னும் சில மாதங்களில் நடத்தப்படும். இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.