Skip to main content

எதிர்பார்ப்புகளை கிளப்பும் 4 மாநில வாக்கு எண்ணிக்கை

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

4 State Polls That Raise Expectations

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது.

 

தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை அங்கு தேவாலயங்களில் வழிபாடு நடக்கும் என்பதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரிக்கைகள் எழுந்தது. அதனைத்தொடர்ந்து மிசோரமில் மட்டும் வாக்கு எண்ணிக்கையானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்