Skip to main content

சிபிஆர் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை; வைரலாகும் வீடியோ

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

Infant saved by CPR; A viral video

 

சிபிஆர்  சிகிச்சை கொடுக்கப்பட்டு பச்சிளம் குழந்தை காப்பாற்றப்படும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை பகுதியில் பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளங்குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தை மயக்கமடைந்தது. உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் குழந்தைக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தனர். சில நிமிட சிபிஆர் சிகிச்சைக்கு பிறகு குழந்தைக்கு மீண்டும் உணர்வு திரும்பியது. அதனைத் தொடர்ந்து உடனடியாக குழந்தையானது ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக குழந்தை பூரண குணமடைந்தது. இந்நிலையில் பச்சிளங்குழந்தைக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சியை பகிர்ந்துள்ள தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ், சிபிஆர் சிகிச்சை கொடுத்து பச்சிளங்குழந்தையை காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்