Skip to main content

20 கிலோ தங்க நகை, ரோலெக்ஸ் வாட்ச்சுடன் வலம்வரும் கோல்டன் பாபா சாமியார்!

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

 

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கன்வர் யாத்திரையில் கலந்துகொள்ள வந்த கோல்டன் பாபா என்ற சாமியார் சுமார் 20 கிலோ தங்க நகைகளுடன் வந்தார். அவர் அணிந்திருந்த சிவன் பட தங்க சங்கிலி மட்டும் 2 கிலோ ஆகும், கையில் ரோலெக்ஸ் வாட்ச் என விதவிதமான நகைகள் அணிந்திருந்தார்.

 

golden baBA

 

 

 

அவர் அணிந்திருந்த நகையின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி ஆகும் எனவே போலீசார்களின் பாதுகாப்புடன்தான் அவர் எப்போதும் வெளியே வருவார் என அனைவரும் தெரிவித்தனர். அந்த நகைகள் மட்டுமின்றி ஒரு bmw கார், 2ஆடி கார், 2 இன்னோவா கார்கள் அவருக்கு சொந்தமாக உள்ளது. 20 கிலோ தங்க நகைகளை போட்டுகொண்டு கோல்டன் பாபா என தெருவில் போலீசார் பாதுகாப்புடன் வலம் வருவது அங்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்