Published on 18/05/2020 | Edited on 18/05/2020
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் பழனிச்சாமி, இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
![tn cm palanisamy write letter for pm narendra modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/bHr_vD_nArMhimGY9z0JSKMYAFGiRiUtXUgFg8_Yfjs/1589789528/sites/default/files/inline-images/cm%20456398.jpg)
அதில், விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவைத் தமிழக அரசிடமே விட வேண்டும். மானியம் வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய பொருளாதாரத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என நம்புவதாகவும் மாநில அரசின் கடன் வரம்பு குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார் முதல்வர்.