School Education Department Notification for Attention Class 12 candidates

தமிழ்நாடுபாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதே போல், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 26ஆம் தேர்வு தொடங்கப்பட்டு ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி (இன்று) முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பிற்பகல் முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.