Published on 18/05/2020 | Edited on 18/05/2020
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் அருகே நல்லூர் கிராமத்தில் ரூபாய் 336.96 கோடி மதிப்பில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. 150 மருத்துவ மாணவர் சேர்க்கையுடன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது.
அதன் தொடர்ச்சியாக 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடைநிலை மூலதன கடனுதவியாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்வின்போது தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடனிருந்தார்.