Skip to main content

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Published on 01/06/2018 | Edited on 01/06/2018


பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில், எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இந்த மனு, விடுமுறைகால நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் ஜூன் 1ம் தேதி வரை எஸ்.வி. சேகரை கைது செய்ய தடையும் விதித்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அதில் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், எஸ்.வி.சேகரை கைது செய்யத் தடையில்லை என்றும் தெரிவித்தது. மேலும் எஸ்.வி.சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

சார்ந்த செய்திகள்