Skip to main content

தமிழகம், புதுச்சேரிக்கு ஏப்ரல்18ல் தேர்தல்!

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர் 17வது மக்களவை தேர்தல் தேதி குறித்து அறிவித்தார்.

 

17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

 

a


முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்-11,  இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-18, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-18, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் -29,  ஐந்தாம் கட்ட தேர்தல் மே-6,   ஆறாம் கட்ட தேர்தல் மே-12,   7ம் கட்ட  தேர்தல் மே-19ல் நடைபெறும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் -18ல் நடைபெறுகிறது.   
 

சார்ந்த செய்திகள்