Published on 18/04/2020 | Edited on 18/04/2020
சீனாவில் இருந்து 24,000 ரேபிட் பரிசோதனை கருவிகள் வந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் முதல்முறையாக சேலம் அரசு மருத்துவமனையில் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் மூலம் கரோனா பரிசோதனைத் தொடங்கியுள்ளது. கரோனா பரிசோதனையை விரைவுபடுத்த சேலம் மாவட்டத்திற்கு 1000 ரேபிட் பரிசோதனைக் கருவிகள் அளிக்கப்பட்டன. ரேபிட் கருவியால் 6 மணி நேரத்துக்குப் பதிலாக அரை மணி நேரத்தில் கரோனாவைக் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் மூலம் சேலத்தில் முதல்முதலாக நடந்த சோதனையில் 18 பேருக்கும் கரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. 30 நிமிடத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட்டது சேலம் அரசு மருத்துவமனை. இதனிடையே மத்திய அரசிடமிருந்து கரோனா பரிசோதனைக்காகத் தமிழகத்துக்கு 12,000 ரேபிட் பரிசோதனைக் கருவிகள் வந்துள்ளன.