Published on 29/05/2020 | Edited on 29/05/2020
![puducherry petrol and diesel price increased](http://image.nakkheeran.in/cdn/farfuture/0WpSc3UeSfdSi_QnRkBAQXiyZ2jMDE4DFZl8L8VAkpk/1590720772/sites/default/files/inline-images/petrol%20458.jpg)
புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 3.32, ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 2.01 உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் இரண்டாம் முறையாக உயர்த்தப்பட்ட கரோனா வரி உயர்வு அமலுக்கு வந்ததால் பெட்ரோல், டீசல் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூபாய் 69.39லிருந்து ரூபாய் 72.7, டீசல் விலை ரூபாய் 65.16 லிருந்து ரூபாய் 67.17 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கரோனா வரி உயர்வு மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.